Breaking
Fri. Nov 15th, 2024

– டீன் பைரூஸ் –

காத்தான்குடி சமாதான ஒன்றியம் ஏற்பாடு செய்த உஸ்தாத் மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் வெளியீட்டு விழா றாபிதத்தூன் நளீமிய்யீன் உடைய தலைவர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.கே. அப்துர் றாசீக் (நளீமி) தலைமையில் 16.10.2015 வெள்ளியிரவு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம் பெற்றது.

இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலான ‘குர்ஆனிய சிந்தனை’ எனும் நூல் இரண்டாவது வெளியீடாக காத்தான்குடியில் வெளியிடப்பட்டது. இதன் முதலாவது வெளியீடு கொழும்பில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் கலாமை அறிந்து கொள்ளும் வகையில் அழகிய தமிழில் எழுதப்பட்டுள்ள நூலானது பலதரப்பட்ட மக்களும் தெளிவாக விளங்கிக் கொள்ளும் அளவு எழுதப்பட்ருப்பதானது ஆசிரியரின் அறிவுத்திறனை,ஆற்றலை தாகத்தை காணக் கூடியதாக உள்ளது.

மேற்படி நிகழ்வின் கௌரவ அதிதியாக காத்தான்குடி ஜெம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர்(பலாஹி) காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவர் றஊப் ஏ மஜீட் உட்பட பல உலமாக்கள்,ஆசிரியர்கள்,கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் நிகழ்வின் விசேட அதிதியாக அக்குறணை அல்குர்ஆன் திறந்த பல்கலை கழக பணிப்பாளர,; நூலாசிரியர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.எம்.மன்ஸூர் (நளீமி) கலந்து கொண்டார்.

நிகழ்வின் நூல் அறிமுக உரையினை காத்தான்குடி ஜெம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் கவிமணி,மௌலவி, எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) நிகழ்தினார். நூல் ஆய்வுரையினை தென் கிழக்குப் பல்கலை கழக இஸ்லாமிய கற்கை நெறி பீடாதிபதி அஷ்ஷெய்ஹ் எஸ்எம்.எம்.மஸாஹிர் (பலாஹி) நிகழ்த்தினார்.
இலங்கையின் வரலாற்றில் முதன் முதலாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலான ‘குர்ஆனிய சிந்தனை’ எனும் நூல் முஸ்லிமான ஒவ்வொருவருடைய வீட்டிலும் அது இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் அன்பான வேண்டுகோலினை ஏற்றுக் கொண்ட பலர் அவையில் பிரதிகளை பெற ஆவலாய் நின்றதனை காணக் கூடிதாக இருந்தது.

By

Related Post