Breaking
Mon. Dec 23rd, 2024

– எஸ்.அஸ்ரப்கான் –

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் (08) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் – அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக் குழுவின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகளும், புலனாய்வு அறிக்கை, ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் போரத்தின் சகல ஊடகவியலாளர்களும் கலந்து பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றனர்.

சரியாக காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பிரயோசமான பல விடயங்கள் முன் வைக்கப்படவுள்ளது. இதில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு; பிரதி பணிப்பாளர் அமீர் ஹுஸைன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.

By

Related Post