Breaking
Sat. Dec 28th, 2024

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடக இயக்கத்துக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஊடக சுதந்திரம், தடை நீக்கம், மற்றும் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய கோவை ஒன்றை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர, மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, “எனது அரசியல் வாழ்வின்போது எந்தவொரு ஊடக நிறுவனத்துடனோ அல்லது எந்தவொரு ஊடகவியாலாளருடனும் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஊடகங்களை ஒடுக்கும் வகையில் எமது (மஹிந்த ராஜபக்ஷ) அரசாங்கம் செயற்பட்டபோதும், வேறு அரசாங்கங்கள் செயற்பட்டபோதும் நான் அதற்கு எதிராக செயற்பட்டேன். இந்த நாட்டில் இதற்கு முன்னர் அரச தலைவர்கள் செயற்பட்டதைவிட, தெளிவான முறையில் நான் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவேன்” என்றுள்ளார்.

Related Post