முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்த காலத்தில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் துரிதமாக விசாரணை செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதால், பலர் எண்ணியுள்ள போதிலும் எந்த காரணம் கொண்டும் விசாரணைகளை இடையில் நிறுத்த போவதில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக சுமார் 7 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
விசாரணைகளை நடத்த போதுமான காலம் இருக்கிறது. குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களில் அரச அதிகாரிகள், மாகாண சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மாத்திரமல்லாது முன்னாள் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.