Breaking
Fri. Nov 22nd, 2024

பாடசாலையின் பாடவிதானங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறியினை அறிமுகப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வந்துள்ளது.

இது தொடர்பில் ஆசிரியர்களை பயிற்சிவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறிகளை 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்கு கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் இந்த பாடத்திட்டம் பாடசாலைகளில் உள்வாங்கப்படவுள்ளதாகவும், மேலும் பல நிபுணர்களையும் இதனுடன் சம்பந்தப்படுத்த எண்ணியுள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

By

Related Post