ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார்.
நாட்டிலிருந்து சொத்துக்களை திருடிச் சென்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான கூட்டு சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கு மாநாடு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியைடைவதாக தெரிவித்த அவர், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கூறினார்.
ஊழலுக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன்னதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் ஜனாதிபதி மைத்திரிபால சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.