Breaking
Thu. Jan 16th, 2025

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ­சீந்திர சேனாநாயக்க நேற்றுக்காலை 9.14 மணிக்கு சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அத்துடன் ஆளுந்தரப்பு உருப்பினர்களும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். இதேவேளை, ஊவா மாகாண அமைச்சர்கள் நால்வரினதும் பதவிப்பிரமாணம் பிற்போடப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நாடு திரும்பியதையடுத்தே இவர்களுக்கான பதவிப்பிரமானத்தை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற ஊவா மாகாண ஆளுந்தரப்பினரின் பதவியேற்பு நிகழ்வில், பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்­ச, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபாலடி சில்வா, பஸில் ராஜபக்­ச, ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவ, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மாகாண சபை முதலமைச்சர்களும், அரச அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவியேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர் அமைச்சர்கள் உட்பட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் ­சீந்திர ராஜபக்­சவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த ­சீந்திர ராஜபக்­ச மீண்டும் ஊவா மாகாண புதிய முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post