ஊவா மாகாண சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் திணைக்களத்துக்கு தேர்தல்கள் திணைக்களம் மேலும் 40 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,வழங்கப்பட்ட 05 மில்லியன் ரூபாவுக்குப் புறம்பாகவே இந்த 40 மில்லியன் ரூபா வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.(DC)