ஊவா மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று பதுளைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, பசறை, பண்டாரவளை மற்றும் பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டு மாகாண சபை தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.