Breaking
Thu. Dec 26th, 2024

ஹரின் பெர்ணான்டோ, ஊவா மாகாண முதலமைச்சராக செயற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று நிராகரித்தது.

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சஷிந்திர ராஜபக்ஸ அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி மேன்முறையீட்டு மனு தாக்கல்  செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

எனினும், எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Related Post