கிப்தில் 30 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வந்த முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டும் சிறைதண்டணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹூசைனி முபாரக்கின் பதவி காலத்தில் அவரும், அவரது மகன்களும் செய்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, முபாரக்கிற்கு மூன்றாண்டும் அவரது மகன்கள் கமால் முகமது ஹூசைனி முபாரக், மற்றும் அலா ஹூசைனி முபாரக் இருவருக்கும் 4 ஆண்டு சிறைதண்டணை வழங்கி தீர்ப்பளித்தார். தண்டனைக் காலத்தில் பரோலில் வெளிவர முடியாது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.