-இப்னு ஜமால்தீன்-
எகிப்தின் இராணுவத் தளபதியாக இருந்த அப்துல் பத்தாஹ் அஸ் சீசியின் தலைமையிலான குழுவினரால்ஜனாதிபதி முர்சி தலைமையிலான ஜனநாயக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டபோராட்டத்தில் வெற்றிகண்ட சீசீ குழுவினர் எகித்தை ஆட்சி செய்து வருகின்றனர்.
சீசியின் அரசானது அந்நாட்டு சகோதரத்துவ உறுப்பினர்களை அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டு வருகின்றது.
அதன் வெளிப்பாடாக சகோதரத்துவ உயர்பீட உறுப்பினர்கள், கலாநிகள், ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவியர்களுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் மரண தண்டனையாகவே இருக்கின்றது.
சகோதரத்துவ, ஹமாஸ் அமைப்புகளுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்ட மாணவன் அஹமத் சாஹினின் வழக்கை இன்று (25) விசாரணைசெய்த அல் ஜீசான் குற்றவியல் நீதிமன்றம் அம்மாணவனுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அல்ட்ரா ரபாவி அமைச் சேர்நத 5 உறுப்பினர்களுக்கும் குறித்த நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
அதே நேரம் கிர்டாசா தேவாலயத்திற்கு தீ மூட்டினர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2013.08ம் மாதம் கைது செய்யப்பட்டவர்களுக்கு அந்நாட்டு பணம்20,000 பெளன்களை தண்டமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது ஜீசான் குற்றவியல் நீதிமன்றம்.