Breaking
Mon. Dec 23rd, 2024

கண்டி மாவட்டத்தின், உடபலாத தேர்தல் தொகுதியில், எகொட கலுகமுவ பிரதேசத்து மக்களுக்கு பலவருட காலமாக இருந்து வந்த காணி உறுதிப்பத்திரம் சம்பந்தமான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், எகொட கலுகமுவ பிரதேச மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தில் ஒரு பகுதியாக, மக்கள் காங்கிரஸின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் ஏ.காதரினால் பிரதேச செயலகத்தின் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் அவர்கள் பாரிய அளவில் முயற்சித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர்களின் முயற்சிகளின் பலனாக காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருகிறது. எகொட கலுகமுவ பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற அனைவருக்கும் கூடிய விரைவில், உறுதிப்பத்திரங்கள் கையளிக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post