Breaking
Mon. Dec 23rd, 2024

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல்போன சம்­பவம் தொடர்பில் நான்கு இரா­ணு­வத்­தினர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர்.

இரண்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள், சார்ஜன்ட் மேஜர் தர அதி­காரி ஆகியோர் கைதுசெய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த நால்­வரும் கைதுச் செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அந்த பிரிவின் பணிப்­பளர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் தற்போது மொத்தமாக 7 பேர் எக்­னெ­லி­கொட விவ­காரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 24 ஆம் திகதி பிரகீத் எக்­ன­லி­கொட ராஜ­கி­ரிய பகு­தியில் வைத்து கடத்­தப்­பட்­டி­ருந்தார். அது முதல் காணாமல் போயி­ருந்த அவர் தொடர்பில் ஹோமா­கம பொலி­ஸாரும் , பின்னர் மிரி­ஹான பொலி­ஸாரும் அதனைத் தொடர்ந்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரும் விசாரணைகளை நடத்தினர்.

இந் நிலை­யி­லேயே எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு கொலை செய்யப் பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிப்பதுடன் இரா­ணுவத் தரப்பை சேர்ந்த 7பேரை தற்­போது கைது செய்­துள்­ளனர்.

முன்­ன­தாக இரா­ணு­வத்தின் புல­னாய்வுப் பிரிவை சேர்ந்த இருவரையும் ஓய்­வு­பெற்ற சார்ஜன் மேஜர் ரண் பண்டா என்­ப­வ­ரையும் புல­னாய்வுப் பிரிவு கைது செய்து விசா­ரணை செய்­தது. இதில் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்டு கிரித்­தலை இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டமை மற்றும் அதன் பின்னர் அவர் அங்­ஜி­ருந்து குறித்த முகாம் பொறுப்­பா­ளர்­களின் உத­வி­யுடன் வேறு இடத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­மையும் தெரி­ய­வந்­தது.

இந் நிலையில் குறித்த காலப்­ப­கு­தியில் கிரித்­தலை இரா­ணுவ முகா­முக்கு பொறுப்­பாக இருந்த லெப்­டினன் கேர்னல் குமார ரத்ன, லெப்­டினன் கேர்னல் சிரி­வர்­தன, சார்ஜன் ராஜ­பக்ஷ மற்றும் கோப்ரல் ஜயலத் ஆகி­யோரை விசா­ரணை செய்ய வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரிவு எழுத்து மூலம் இரா­ணுவ தலை­மை­ய­கத்தை கோரி­யது. அவர்­க­ளிடம் வாக்கு மூலம் பெற வேண்­டிய தேவை இருப்­பதால் அவர்­களை நேற்று விசாரணைக்கு அனுப்­பு­மாறு அதில் கோரப்­பட்­டி­ருந்­தது.

லெப்­டினன் கேர்னல் குமார ரத்ன, லெப்­டினன் கேர்னல் சிரி­வர்­தன, சார்ஜன் ராஜ­பக்ஷ மற்றும் கோப்ரல் ஜயலத் நேற்று விசாரணைக்கு வருகை தந்­த­துடன் அவர்­க­ளிடம் விஷேட விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. பகல் 12 மணிக்கு பின்னர் ஆரம்­ப­மான இந்த விசா­ர­ணைகள் மாலை 5.00 மணி வரை நீடித்­தன. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மணி நேர விசா­ர­ணைக்கு பின்னர் அந் நால்­வரும் புல­னாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நால்வரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றது.vk

Related Post