Breaking
Wed. Dec 25th, 2024

கடத்­தப்­பட்டு காணாமல் போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட, கிரித்­தலை இரா­ணுவ முகாமில் தடுத்து வைக்­கப்­பட்டு, அங்­கி­ருந்து வெலி­க்கந்த முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. அதன் பின்னர் வெலிக்­கந்த முகாமில் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து தற்­போது விசா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் விரைவில் வெலிக்­கந்த முகாமை சோத­னைக்கு உட்­ப­டுத்த மன்றின் அனு­ம­தியை சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­யுடன் பெற்­றுக்­கொள்ள உள்­ள­தாகவும் பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட சோதனை அனு­ம­தியின் பிர­காரம், எக்­னெ­லி­கொட விவ­கா­ரத்தில் தற்­போது கைதா­கி­யுள்ள 11 பேரில் 7 பேர் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­கர, பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா ஆகியோர் உள்­ள­டங்­கிய குழு­வி­னரால் கடந்த செவ்­வா­யன்று கிரித்­தலை முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். அன்­றைய தினம் மாலை 6 மணி வரை இவ்­வி­சா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருந்­த­துடன், கிரித்­தலை இரா­ணுவ புல­னாய்வு முகாமில் பிர­தான வாயிலில் பேணப்­பட்ட அதி­கா­ரிகள் விடு­மு­றையில் செல்­லும்­போதும் மீண்டும் வரும்­போதும் பதி­யப்­படும் ஆவணம், அந்த முகாமில் 20 கிலோ மீட்­ட­ருக்கு அப்பால் செல்ல வழங்­கப்­படும் அனு­மதி ஆவணம் ஆகி­ய­வையும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. இதி­லி­ருந்து பல்­வேறு தக­வல்கள் பெறப்­பட்­டுள்­ள­துடன் மேல­திக விசா­ர­ணை­களில் எக்­னெ­லி­கொட கிரித்­த­லையில் இருந்து, அப்­போது அம்­மு­கா­முக்கு பொறுப்­பாக இருந்த கேர்ணல் தர அதி­கா­ரி­யினால் வெலிக் ­கந்த முகா­முக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக, எக்­னெ­லி­கொ­ட­வுக்கு சொந்­த­மான சிகி­ரி­யவில் உள்ள இட­மொன்றில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி செய்­யப்­பட்­ட­தாக கூறப்­படும் கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் ஒலிப்­ப­திவு செய்­துள்­ளனர். அந்த ஒலிப்­ப­தி­வா­னது மறுநாள் புல­னாய்வு பணிப்­பா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. புல­னாய்வு பணிப்­பா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்ள ஆவணம், புல­னாய்­வா­ளர்கள் தொலை­பேசி இலக்­கங்கள் மற்றும் அத­னுடன் தொடர்­பு­பட்ட ஆவ­ணங்­களை நேற்று முன் தினம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் ஆய்வு செய்­துள்­ளனர்.
இத­னை­விட கொழும்பில் உள்ள ஏனைய நான்கு சந்­தேக நபர்­க­ளையும் எதிர்­வரும் 13 ஆம் திக­திக்குள் கிரித்­தலை முகா­முக்கு அழைத்துச் சென்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் புல­னாய்வுப் பிரி­வினர் தீர்­மா­னித்­துள்­ளனர். இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் கடத்­தப்­பட்ட எக்­னெ­லி­கொட, இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களால் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என சந்­தேகம் அதி­க­ரித்­துள்­ளது.

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போனமை தொடர்பில் அவ­ரது மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொட குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முறை­யிட்­டதை தொடர்ந்து அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்­க­மைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அப்பிரிவின் பணிப்பாளர் சுகத் நாகஹமுல்ல ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் கீழ் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post