Breaking
Sun. Dec 22nd, 2024

ஊடகவியாலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சந்தேக நபரான லெப்டினட் கேர்ணல் சுபோத சிறிவர்தனவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரை 20 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 60 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பிரதி ஞாயிறு தோறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்லவும் தடைவிதித்துள்ளார்.

இந்த வழங்கு விசாரணை ஜூன் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

By

Related Post