Breaking
Thu. Nov 14th, 2024
– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் –
 
யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்றப்பட்ட பின்னரும்  எங்களுக்கு உதவுபவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மட்டுமே. எங்களின் இன்ப துன்பங்களிலும் அவர் பங்கேற்பவர் என ஸ்ரீ பன்வௌ விகாராதிபதி நிலக லங்கார தேரர் தெரிவித்தார்.

வெலி ஓயா பிரதேசத்தின் பல்வேறு  கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(03) அமைச்சர் றிஷாட் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டு அந்த பிரதேச மக்களைச் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஸ்ரீ பன்வௌ பகுதியில் இடம்பெற்ற கூட்ட மொன்றில்; உரையாற்றிய தேரர் மேலும் கூறியதாவது:-

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதமின்றி எல்லோருக்கு உதவி வருபவர். அவரும் வெலிஓயா மக்களைப் போன்று யுத்த காலத்தில் அகதியானவர். வெலிஓயா மக்கள் பல்வேறு கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுபவித்தவர்கள். இப்போதும் அதன் விளைவுகளை அனுபவிப்பவர்கள். புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தோம். எந்த நேரத்திலும் எமக்கு ஆபத்துக்கள் வந்தாலும் ஓடோடி வந்து உதவியவர். தேர்தல்; காலங்களில் இங்கு வந்து பணத்தையும், பொருட்களையும் தந்து வாக்குக் கேட்டவர்கள் இன்று இந்தப் பக்கம் வருவதேயில்லை. தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற அமைச்சர் றிஷாட் பதியுதீன் இங்கு வந்து மக்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிவதுடன் நன்றியையும் தெரிவிக்கின்றார். இதுதான் மக்கள் சேவகனின் பண்பாகும். அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்றுமே பொய் சொல்பவர் அல்ல அன்று இடம்பெற்ற ஹிரு தொலைக் காட்சி விவாதத்தில் எமது பௌத்த தேர துறவியுடன் உரையாடும்போது அவர் மிகவும் கண்ணியமாகவும். விளித்துப் பேசி தனது நியாயங்களை நிருபித்தார். இதன் மூலம் சிங்கள மக்களின் மனதைக் கவர்ந்தார்.

அது மட்டுமன்றி எங்களைப் போன்ற பௌத்த மத குருமார்களுக்கும் வில்பத்தைப் பற்றி தவறாக எண்ணி இருந்த எமது சிங்கள மக்களுக்கும் உண்மையை வெளிப்படுத்தினார்.

அந்த நேரமே நான் தொலைபேசி அழைப்பை எடுத்து அவரை பாராட்ட நினைத்த போதும் அந்த சந்தர்ப்பம் எனக்கு பொறுத்தமாக தெரியவில்லை. அமைச்சர் கடந்த 15 ஆண்டு காலமாக அரசியல் செய்பவர். அவருடைய அரசியல் பயணத்தில் மக்கள் பணியிலும் நான் பங்கேற்று இருக்கிறேன்.

சிங்கள அமைச்சர்கள் பலர் இருந்து போதும் இந்தப் பிரதேசத்திற்கு வந்து எமக்குதவவில்லை. எமக்கு உதவும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை  நாங்கள் என்றுமே மறக்கமாட்டோம். அவருடைய அரசியல் பயணத்திற்கு வெலி ஓயா மக்களின் ஒத்துழைப்பு என்றுமே கிடைக்குமென அவர் தெரிவித்தார்.

இந்த  நிகழ்வில் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சு, வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள்;  பங்கேற்றனர்.

வெலி ஓயா பிதேசத்தில் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களையும் அமைச்சர் வழங்கினார்.

By

Related Post