Breaking
Sat. Nov 16th, 2024

தென்கொரியாவில் துரிதமாக பரவி வரும் உயிர்கொல்லியான ‘மர்ஸ்’ வைரஸ் இலங்கைக்குள் பரவுவதை தடுக்கும் வகையில் விசேட முன்னெச்சரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு பிரிவின் தகவல்படி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களை பூரண பரிசோதனை உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 24 மணித்தியால சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பிரஜைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உயிர்கொல்லியான மர்ஸ் வைரஸ் நோய் பின்னர் மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post