Breaking
Sun. Dec 22nd, 2024

இந்திய ரூபாய் நோட்டுகளில் அதிக ளவில் நோய்க் கிருமிகள் இருப்பதாகப் புதிதாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகள், அதிக அளவில் நோய்க் கிருமி கடத்திகளாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய அறிவி யல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் `இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி’ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை ஆராய்ந்தனர்.

இதற்காக முதன்முறையாக, `ஷாட்கன் மெட்டாஜினோம் சீக்வென்சிங்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சுமார் 78 நோய்க் கிருமிகளும், 18 வகையான ஆன்டிபயாடிக் எதிர்ப்புக் கிருமிகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் `ப்ளஸ் ஒன்’ எனும் பிரபல மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப் பட்டுள்ளன. அதில், `இந்த நோய்க் கிருமிகளில் 70% யூகார் யோட்டா (மெய்க்கருவுயிரி), 9 சத வீதம் பாக்டீரியா மற்றும் 1 % வைரஸ் ஆகியவை இருக்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள் கடினத்தன் மையுடன் இருக்கும் காரணத்தால், அவற்றில் நோய்க்கிருமிகள் நீண்ட நாட்கள் வாழும். மேலும். ரூபாய் தாள்கள் எவ்வளவு முறை கைமாறு கின்றன, எவ்வளவு தூரம் ஈரத் தன்மை இழுத்துக்கொள்ளப்படு கிறது போன்ற‌வற்றின் அடிப்படை யில் அந்த நோய்க்கிருமிகள் கெடுதலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு `பயோமெடிசின் அண்ட் பயோடெக்னாலஜி’ எனும் அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்றில், பாலஸ்தீன ரூபாய் நோட்டுகளில் 96.25 % நோய்க்கிருமிகளும், கொலம்பியா நாட்டு ரூபாய் நோட்டு களில் 91.1%, தென்னாப்பிரிக்கா ரூபாய் நோட்டுகளில் 90 %, சவுதி ரூபாய் நோட்டுகளில் 88% மற்றும் மெக்சிகோ ரூபாய் நோட்டுகளில் 69% நோய்க்கிருமிகள் இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல கடந்த ஆண்டு `ஜர்னல் ஆஃப் ரிசர்ச் இன் பயாலஜி’ எனும் ஆய்விதழில் வங்கிகள், மருத்துவமனை போன்றவை கையாளும் ரூபாய் நோட்டுகளில் அதிகளவு நோய்க் கிருமிகள் இருப்ப தாகவும், அதற்கடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் கையாளும் ரூபாய் நோட்டுகளில் கிருமிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post