Breaking
Tue. Dec 24th, 2024

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

இலங்கை அரசியல் இன்று என்ன நடக்கும்?நாளை என்ன எனக்கும்? என சுவாரசியத்திற்கும் பரபரப்பிற்கும் மத்தியில் தனது பயணப் பாதையை அமைத்திருப்பது யாவரும் அறிந்ததே!

அரசாங்கத்தை வீழ்த்த அரசாங்க அம்பே பயன்படுத்தப் படும் அதுவும் அமைச்சராக இருந்த மைத்திரிபாலவே வருவார் என யாரும் கிஞ்சித்தேனும் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.வெற்றிக் கனி முதலை  விட தனக்கருகில் பல மடங்கு அண்மித்து வந்து தலை விரித்து ஆடுவதால்,தானே அதனை சுவைக்க வேண்டும் என்ற ஆசையில் ஐ.தே.க யும் அதன் தலைவரும் அவாவோடு காத்திருந்த போதும் பொது வேட்பாளருக்காய் தங்கள் அவாவை மூட்டை கட்டி வைத்துள்ளார்கள்.

ஐ.தே.க இன் வியூகம் என்ன..??

உண்மையில் ஐ.தே.க பொது வேட்பாளராக களமிறங்க மைத்திரிப்பாலவிற்கு இணக்கம் தெரிவிக்காது இருந்திருந்தால் எந்தளவு பொது வேட்பாளர் முறைமை,அரசாங்கத்தை வீழ்த்துவது சாத்தியமாகி இருக்கும் என்பது கேள்விக் குறியே!முதலில் எவர் காலைப் பிடித்தாவது மிகப் பெரிய ஆட்சிப் பலத்துடன் ஆட்சி செய்யும் தற்போதைய ஜனாதிபதி  மகிந்த ராஜ  வீழ்த்த வேண்டும்.தன்னால் முடியாது என்பதனை ஐ.தே.க நன்கே அறியும்.வீழ்த்தினால் தானே  காட்டிற்கு ராஜா என்பதனையும் ஐ.தே.க நன்கே அறியும்.

ஜனாதிபதியை வீழ்த்துவதன் சாதகத் தன்மையினை உறுதிப்படுத்தவே  பொது வேட்பாளருக்கு ஐ.தே.க இணங்கியது.பொது வேட்பாளர் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால் மிகப் பெரிய கட்சியாக ஐ.தே.க யே திகழும்.தனது மகுடிக்கே பொது வேட்பாளர் படம் எடுத்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பொது வேட்பாளர் தள்ளப் படுவார்.மேலும்,நிறைவேற்று அதிகாரம் முற்றாக நீக்கப் பட்டால் பிரதமரின் அதிகாரம் ஜனாதிபதியை மிஞ்சப் போகிறது.பிரதமராக ஐ.தே.க இன் தலைவரை நியமிக்கவுள்ளதாக கதைகள் அடியும் படுகிறது.ஜனாதிபதிப் பதவியில் பொது வேட்பாளர் இருந்தாலும் கட்சி எதுவும் அவரிற்கு இல்லாததாலும் ஐ.தே.க இற்கு நிகரான பலத்தில்  எதிரணியில் எக் கட்சியும் இல்லாத காரணத்தினாலும் அவரால் பாராளுமன்ற தேர்தல் பக்கமோ,மாகாண சபைப் பக்கமோ,உள்ளூராட்சி மன்றங்கள் பக்கமோ வர இயலாது.காட்டிற்கு ராஜா நான் தான் என ஐ.தே.க நம்புகிறது.இவரின் ஆட்சி கவிழ்ந்தால் தங்களால் இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள இயலும்.இவைகளே ஐ.தே.க இனது இத் தேர்தல் வியூகமாக இருக்கலாம்.

அப்படியானால்,பலிக்கடாவாக எதிரணிக் கூட்டு பொது வேட்பாளரை ஐ.தே.க பயன் படுத்த விளைகிறதா?என்ற வினா எழலாம்.இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் 67 சதவீதத்தை பெற்று வரலாற்றில் இடம் பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 47 அரசியல் அனுபவம் கொண்ட மைத்திரிப் பாலவை  பலிக் கடாவாக பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை அறியாமல் இருப்பார்களா? என்ற வினாவினை எழுப்பி விடை பெற எத்தனித்தால் அவர்கள் இதை விட பல மடங்கு வியூகம் வகுத்தே களமிறங்கி இருப்பார்கள் என்பது தெளிவாகிறது.

இவர்கள் வியூகம் என்ன..??

தற்போதைய பொது வேட்பாளர்  மைத்திரிப் பால விற்கென ஒரு கட்சி இல்லாமல் இருக்கலாம்.ஆனால்,உருவாக்க முடியாது என்றல்ல.ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று ஓரிரு மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறலாம்.தற்போதே அரசாங்கத்தைச் சேர்ந்த பலரும் எதிரணிக் கூட்டில் தான் இணைந்துள்ளார்களே தவிர ஐ.தே.க இல் அல்ல.ஜனாதிபதி வாகை சூடியதும்.ஒவ்வொருவரும் தங்கள் கட்சியும் தானும் என்று போய் விடுவார்கள்.தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டும் ஜனாதிபதியை நாடுவார்கள்.ஜனாதிபதி கட்சி எதுவும் இன்றி நட்றாற்றிலா நிற்பது? இவர்கள் அனைவரும் இணைந்து புதுக் கட்சி ஒன்றினைந்து  ஸ்தாபிக்கலாம்.அவ்வாறு உருவாக்குவார்களாக இருந்தால் மேலும் சு.க இனைச் சேர்ந்த பலரும் அக் கட்சியுடன் இணைந்து பாரிய ஒரு கட்சியாக இவர்கள் கட்சி உருவெடுக்க வாய்ப்புள்ளது.ஜனாதிபதியும் தங்கள் பக்கம் உள்ள தால் மக்கள் பார்வையை தங்கள் வசப் படுத்துவது அக் கட்சிக்கு மிகவும் இலகுவானதாக அமையப் போகுறது.

பாரிய கட்சியாக உருவெடுத்தால் ஐ.தே.க இற்கு பொது வேட்பாளர் அடிபணிய வேண்டிய நிலைமை இருக்காதல்லவா?மீண்டும் ஓர் பலமிக்க சு.க கட்சி உருவாகப் போகிறது.

த.தே.கூ , ஜ.க , ஜே.வி.பி என்பன அடி பட்ட பாம்பு என்பதால் ஜனாதிபதியை கடிக்க தயாராகின்ற போதும் ஜாதிக ஹெல உருமய மக்களுக்காக பணிப்போரிற்கு தயாராகிறது என்பதனை மறுக்க  இயலாது.

யார் அரசியல் சாணக்கியம் வெல்லப் போகிறது என்பதை நேரம் வரும் போது தான் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை

இலங்கை.

Related Post