Breaking
Fri. Nov 22nd, 2024
“பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ­’ என்று தடுமாறி உச்சரித்து பின்னர் சுதாகரித்து சரியாக வாசித் தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப் பாணம் துரையப்பா விளையாட்ட ரங்கில் ஆரம்பமாகியது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹிந்தவை வாழ்த்தி, அவரை ஆதரிக்கக் கோரி வெற்றிலைச் சின்னத் துக்கு வாக்களிக்குமாறு உரையாற் றினார். அந்தச் சமயத்தில் உரையின் இடையே “பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ­’ எனத் தடுமாறி வாசித்து பின்னர் திருத்தி வாசித்துக் கொண்டார்.

இதன்போது தான் கொண்டு வந்திருந்த அறிக்கையயான்றை அவர் வாசித்தார்.

நான் நடைமுறைச் சாத்தியமான அரசியலை நடத்திவருகிறேன். நான் அரசியல்வாதியல்ல. நான் ஓர் அரசியல் போராளி. எனது நடைமுறைச் சாத்தியமான வழியில் அழிவுகளுக்கோ இடப்பெயர்வுக்கோ மக்களை இட்டுச் செல்லவில்லை. பதிலாக மக்களுக்கு எது சரியோ அந்த வழியைப் பின்பற்றிவருகிறேன். ராஜித சேனாரட்ன அமைச்சராக ஜனாதிபதியுடன் இருக்கும்போது என்னைப் புகழ்ந்துவந்தார். இப்போது விமர்சிக்கிறார். நான் எதுவுமே பேசுவதில்லை எனத் தெரிவிக்கிறார். உண்மைதான். நான் உணர்ச்சிவசப்பட்டு பெயர், புகழுக்காகப் பேசுவதில்லை. மக்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பேசுகிறேன் என்று கூறிய அமைச்சர் டக்ளஸ், மாம்பழக் கதையையும் கூறினார். கூட்டமைப்பையும் வடமாகாண சபையையும் வழமைபோலவே அவர் தனது உரையில் விமர்சித்தார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொது எதிரணியினரையும் அவர் சாடினார்.

போரை முடிவுக்குக் கொண்டுவந்த முழுப்பொறுப்பும் தங்களையே சாரும் என அவர்கள் புலம்பிவருகின்றனர். சந்திரிகா பிரபாகரனின் பெயரை நல்லதற்காகச் சொல்லவில்லை. அதை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டனர். அவரே போரின் வெற்றிக்கு முதல் வழிசமைத்தார் எனக் கூறினார்.

2009ஆம் ஆண்டு ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்த சமயம், பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு மைத்திரிபாலவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றும் அதன்போது புலிகளை அழிக்க தானே கொத்துக்குண்டுகளை வீசச் செய்தார் என்றும் பொது எதிரணி வேட்பாளர் கூறிவருகிறார். இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவும் போரின் வெற்றியைத் தன்னுடையதென்று கூறிவருகிறார். இதில் உண்மையான வெற்றியாளர் யார்? அது மக்களாகிய உங்களுக்கே தெரியும். போரை முடிவுக்குக் கொண்டுவந்து வடபகுதியை அபிவிருத்தி செய்த பொறுப்பு ஜனாதிபதி மஹிந்தவையே சாரும் என்று புகழ்ந்தார் அமைச்சர் டக்ளஸ்.

Related Post