Breaking
Sat. Jan 11th, 2025

2015 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு 59 சதவீதமும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 41 சதவீத வாக்குகளுமே கிடைக்குமென புலனாய்வுத் துறையினரின் கணிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக செய்தி ஊடகமொன்றுக்கு கசிந்ததையடுத்து புலனாய்வுத் துறையின் உயரதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பாரிய அரசியல் மாற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் உண்மைகள் வெளிவரும் போது, மகிந்த ராஜபக்ஷ தடுமாற்றமடைந்து தான் என்ன செய்கிறார் என்பதை அவராலேயே புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டினார். நேற்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே கரு ஜயசூரிய மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

-Thinakural-

Related Post