எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
ஆளும் கட்சியின் மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறத்து அதிருப்தியடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு நெருக்கமானவர்கள் பலரும் இவரை பொது வேட்பாளராக நியமிக்க ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளில் பல ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் பலரும் இந்த அமைச்சருக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.