கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் இவ்வாறு சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் சந்தித்து ஜனாதிபதிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
சந்திரிக்கா நம்பர் மாதம் 1ம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன நம்பர் 2 முதல் 5ம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கியிருந்தார்.
சம்பிக்க ரணவக்க நம்பர் 2 முதல் 4ம் திகதி வரையிலும், ரணில் விக்ரமசிங்க நவம்பர் மாதம் 14, 18 மற்றும் 19ம் திகதிகளிலும், திகாம்பரம் நவம்பர் மாதம் 25ம் திகதி முதல் 29ம் திகதி வரையிலும் தங்கியிருந்தனர்.
மங்கள சமரவீர நம்பர் மாதம் 14ம் திகதியிலும், ராஜித சேனாரட்ன 18 முதல் 21ம் திகதி வரையிலும் சிங்கப்பூரில் தங்கியிருந்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் இவர்கள் சிங்கப்பூரில் சதித் திட்டம் தீட்டியுள்ளனர் என அனுர பிரியதர்சன யாபா குற்றம் சுமத்தியுள்ளார்.