Breaking
Mon. Dec 23rd, 2024

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் முடிவெடுக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாரும் எதிர்பார்க்காத ஒருவரே எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவாரெனவும், இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், அதனை தீர்மானிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகளிடமே ஜனாதிபதி வழங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related Post