அஸ்ரப் ஏ சமத்
இன்று பி.பகல் 03.30மணிக்கு எதிர்கட்சித் தலைவரும் ஜ.தே.கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிர், பேராசிரியர் றிஸ்வி சரீப் சட்டத்தரணி இல்யாஸ், தலைமையிலான குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் அழுவலகத்தில வைத்து முஸ்லீம்களது பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார்கள்;.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லீம்களது அபிலாசைகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உட்படுத்தல் வேண்டும். ஏன இக் குழு கோரிக்கை விடுத்தனர் அத்துடன் வடக்கு முஸ்லீம்களது மீளக் குடியேற்றல் ஒரு குறிப்pட்ட தினத்தில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அம்மக்களை மீள குடியேற்றல் வேண்டும். எனவும் கலந்துரையாடப்பட்டதாக எம்.எம். சுகையிர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் – மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு சில கருத்துக்களை முன்வைத்துள்ளோம். 100 நாள் திட்டத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்ட இனவாத மத குழுவை செயற்பாடுகளை இடைநிறுத்தி இனங்களுக்கிடையில் நிம்மதியாகவும் அவரவர் மத சடங்குகளை செய்யும் விடயம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
கடந்த 2 அரை வருடங்களாக முஸ்லீம்களுக்கு ஏற்படுத்திய அநீதிகள், மற்றும் முஸ்லீம்களது காணிப்பிரச்சினைகளை தற்பொழுது தான் தேர்தல் ஒன்று வந்ததும் ஒரு இரு மணித்தியாலயங்களுக்குள் தீர்ப்பதற்கு அரசாங்கம் நினைத்து பாக்கின்றது. இப்பிரச்சினைகளை அவ்வப்போது முளையிலேயே கிள்ளி எறிந்திருந்திருக்க வேண்டும். இப்ப 30 நாற்களுக்குள் தீர்வுகானும் விடயம்போன்று சில முஸ்லீம் தலைவர்களுடன் அரசாங்கம் பேசுகின்றது.
இவ்விடயங்களை அவ்வப்போது தீர்த்திருந்தால் இந்த அரசாங்கத்தின் மீது முஸ்லீம்கள் வெறுப்படைந்திருக்க மாட்டார்கள்.
இந்தத் தேர்தலில் முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களிகக் வேண்டும். ஏன கேட்டுக்கொள்வதாக சுகையிர் தெரிவித்தார்.