Breaking
Thu. Nov 14th, 2024

எதிர்வரும் 11ம் திகதியானது இலங்கை மக்களுக்கு மிகவும் சிக்கலான நாள் என்றுபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசானது சர்வதேசத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயல்படுவதாகவும்அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அரசு சர்வதேசத்திற்கு அமைய செயற்படுவதாலேயே பொருளாதாரத்தில் சரிவைஎட்டியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது பெரும் சுமையை தினிப்பதன் பொருட்டு பாராளுமன்றில் எதிர்வரும்11ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரி திருத்த சட்டமூலத்திற்கு சார்பாக கையைஉயர்த்துபவர்கள் யார் என முழு நாடும் அறிந்து கொள்ளும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவ்வாறு கையை உயர்த்தி வரி திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்எதிர்வரும் தேர்தல்களில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும் விமல் வீரவன்ஸசுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post