Breaking
Wed. Oct 23rd, 2024

பிரித்­தா­னிய பொதுத் தேர்தல் நேற்று வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மான போது, வெற்­றியைப் பெறு­வது யார் என்­பதை எதிர்­வு­கூ­ற­மு­டி­யாத நிலை­யி­லுள்ள அந்தத் தேர்­தலில் மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் வாக்­க­ளித்­தனர்.

இந்தத் தேர்தல் நாடெங்­கு­முள்ள சுமார் 50,000 வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் அந்­நாட்டு நேரப்­படி காலை 7.00 மணிக்கு ஆரம்­ப­மாகி இரவு 10.00 மணிக்கு நிறை­வு­பெற்­றது.

மொத்தம் 650 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­கான மேற்­படி தேர்­தலில் வாக்­க­ளிக்க 50 மில்­லியன் பேர் பதி­வு­செய்­தி­ருந்­தனர்.

பொதுத் தேர்­த­லுடன் 279 அதி­கா­ர­ச­பைக்­கான 9,000 க்கும் அதி­க­மான ஆச­னங்­க­ளுக்கு உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­கான தேர்­தலும் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
அத்­துடன் பெட்போர்ட், கோப்லான்ட், லெயி­செஸ்டர், மான்ஸ்பீல்ட், மிடில்ஸ்­பரோ மற்றும் டோர்பி பிராந்­தி­யங்­க­ளுக்­கான மேயர்­களும் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

அதே­ச­மயம் பெட்­போர்ட்­ஷி­யரில் நகர சபை வரி­யொன்றை அதி­க­ரிப்­பது தொடர்­பான கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன், தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட், யு.கே.ஐ.பி. கட்­சியின் தலைவர் நிகெல் பராஜ், கிறீன்ஸ் கட்­சியின் தலைவர் நடாலி பென்னெட், எஸ்.என்.பி. கட்­சியின் தலைவர் நிகொலா ஸடர்­ஜியன் ஆகியோர் தமது வாக்­கு­களை ஏற்­க­னவே அளித்­தி­ருந்­தனர்.

லண்­டனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­றாத நிலையில், அந்­ந­கரைத் தவிர்ந்த ஏனைய நகர்­களைச் சேர்ந்த அனைத்து வாக்­கா­ளர்­க­ளுக்கும் அவர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் பிர­வே­சிக்­கையில் குறைந்­தது இரு வாக்­குச்­சீட்­டுகள் வழங்­கப்­பட்­டன.

சில வாக்­கா­ளர்கள் வியா­ழக்­கி­ழமை தேர்­த­லுக்கு முன் தபால் மூலம் தமது வாக்­கு­களை அளித்­தி­ருந்­தனர். அத்­துடன் இம்­முறை மக்­க­ளுக்கு முதல் தட­வை­யாக இணை­யத்­தளம் மூலம் வாக்­க­ளிப்­புக்­காக தம்மை பதிவு செய்­வது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.பாட­சா­லைகள் சன­ச­மூக நிலை­யங்கள், மண்­ட­பங்கள் என்­ப­வற்­றுடன் விடு­திகள், ஒரு சலவை செய்யும் இடம், ஒரு பாட­சாலை பஸ் என்­பன வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருந்­தன.

மேற்­படி தேர்­தலின் இறுதி பெறு­பே­றா­னது இன்று வெள்­ளிக்­கி­ழமை பிற்­ப­க­லுக்குள் வெளி­யாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்தத் தேர்­தலில் பிர­தமர் டேவிட் கமெ­ரோனின் பழை­மை­வாத கட்­சிக்கும் எதிர்க்­கட்சித் தலைவர் எட் மிலி­பான்ட்டின் தொழிற் கட்­சிக்­கு­மி­டையில் கடும் போட்டி நில­வு­வ­தாக கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள் கூறு­கின்­றன.

எனினும் இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை என நம்பப்படுகிறது.

Related Post