Breaking
Tue. Jan 7th, 2025

வடபுல  முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பலாபலன்கள் தற்போது படிப்படியாக கிடைக்கத்தொடங்கியுள்ளதாகவும், வடக்கு மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கம், வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாக கொண்ட நிதிஒதுக்கீடு ஆகியவை முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற  நன்மையாகவே கருதுகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா சூடுவெந்த புலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையல் பயிற்சி நிலைய திறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

நாம் எதைச் செய்தாலும் எதிர் விமர்சனம் செய்து கொண்டே சிலர் இருக்கின்றனர். இவர்கள் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வோமாய் இருந்தால் எடுத்த மக்கள் பணிகளை தொடரமுடியாத நிலையே ஏற்படும்.

காடுகளாகவும், மேடுகளாகவும் போய் கைவிடப்பட்டுக் கிடந்த வடக்கு முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளில் தற்போது வீடுகளையும், கட்டிடங்களையும் பாடசாலைகளையும் அமைத்துள்ளோம். நீண்டகாலம் தென்னிலங்கையில் அகதிகளாக வாழ்ந்ததனால் நமது பிரதேசங்கள் முகமிழந்து போயிருந்த போதும், தற்போது மீள்குடியேறும் மக்களின் ஒத்துழைப்புடனும் பரோபகாரிகளின் நிதியுதவியுடனும் சில கட்டுமானங்களை கட்டி வருகின்ற போதும,; குடியேறிய மக்கள் வாழ்வாதார வசதிகள் குறைவான நிலையிலேயே இந்தப் பிரதேசத்தில் சீவித்து வருகின்றனர். இதனாலேயே குடியேறிய மக்களில் பலர் வீடுகளை விட்டு தென்னிலங்கைக்கு மீண்டும் சென்று வாழ்கின்றனர். எனவே தான்  மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் மக்களை குடியேற்றும் நோக்கிலே அரசிடம் நாம் விடுத்த தொடர்ச்சியான அழுத்தங்களினால் மீள்குடியேற்றத்திற்கான செயலணி உருவாக்கப்பட்டது.

இந்தச் செயலணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியுதவியின் மூலம் வீடில்லாதவர்களின் பிரச்சினையை படிப்படியாக நிவர்த்தித்து வருகின்றோம். அத்துடன் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அண்மைய வரவுசெலவு திட்டத்தில் வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக ரூபா 2.5பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது நமக்கு கிடைத்த வெற்றியாகவும், அகதிகளின் வாழ்வில் ஏற்படப்போகும் மறுமலர்ச்சிக்கான திருப்பு முனையாகவும் கருதுகிறோம்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரிடம் நாம் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகள் அமைச்சரவைக்கு சமர்ப்;பிக்கப்பட்ட பல பத்திரங்கள் ஆகியவற்றினாலேயே வடக்கு முஸ்லிம்களுக்கு இவ்வாறான விமோசனம் கிடைத்துள்ளது.

எனது அமைச்சின் கீழான இலங்கைப் புடைவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தின் உதவியுடன் பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும்; நோக்கிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் எண்ணத்திலும்  நாடளாவிய ரீதியி;ல் தையல் பயிற்சி நிலையங்களை உருவாக்கி வருவதோடு  பயனாளிகளுக்கு பயிற்சியுடன் தையல் இயந்திரங்களையும் வழங்கி வருகின்றோம்.

இரத்மலானையில் அமைந்துள்ள பயிற்சி கல்லூரிக்கு சென்று பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்வதானால்  பயிற்சியாளர் ஒருவருக்கு, சுமார் ஒரு லட்சம் வரை செலவாகும். அத்துடன் பயிற்சிநெறி நிறைவுற்ற பின்னர் சான்றிதழ் மட்டுமே இந்த கல்லூரியில் வழங்கப்படுகின்றது. ஆனால் நாங்கள் உங்கள் காலடிக்கு வந்து பயிற்சிகளையும் தந்து சான்றிதழ்களையும் வழங்கி தையல் இயந்திரங்களையும் தருகின்றோம்.

பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த பெண்கள் கூட்டுறவு முறையில் ஒருமித்து, மினி ஆதை;தொழிற்சாலை ஒன்றை தமக்குள் ஏற்படுத்தி வருமானத்தை மேலும் ஈட்டுவதற்கான வசதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். யுத்தத்தால் வாழ்விழந்த இளம் பெண்கள், குடும்பச்சுமைகளை தாங்கும் பெண்கள், வேலையற்ற யுவதிகள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் இணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமென நம்புகின்றோம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு

Related Post