ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
அடுத்த வருட (2014) வரவு- செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பின் போது எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென இன்றிரவு (31-10-2014) கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி, கருத்தறிந்தே தீர்மானம் மேற்கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் கலந்து கொண்டிருப்பது விசேட அம்சமாகும்.