Breaking
Mon. Nov 18th, 2024
Bananas

வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம் என்ற எண்ணத்துடனேயே வாழைப்பழத்தை பலர் உண்ணத் தயங்குகின்றனர்.

சிலர் ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது வாழைப்பழம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் ஆணித்தனமாக நம்புகின்றனர்.

ஒரு நாளைக்கு நமது உடளுக்கு சுமார் 4800 மில்லி கிராம் பொட்டாசியம் தேவைப்படும். ஆனால், ஒரு வாழைப்பழத்தில் சுமார் 400 மில்லி கிராம்களே உள்ளது. அதிலும், நமது உயிரைக்குடிக்கும் அளவுக்கு வாழைப்பழம் வலுவாக இருக்க சுமார் 400 பழங்களையாவது ஒரேயடியாக உண்ண வேண்டும். அவற்றில் இருக்கும் பொட்டாசிய சத்து நேரடியாக சிறுநீரகத்தைத் தாக்கினால் உயிரிழக்கலாம். ஆனால், அதை அடைவதற்கு முன் போகும் வழியிலேயே, குடல் பாதி பொட்டாசியத்தை உறிஞ்சிவிடும்.

அதனால் நானூறு பழங்களை ஒன்றாய் உட்கொண்டாலும் உயிரிழப்பு ஏற்படாது என லண்டனில் உள்ள கிங் நிலையத்தின் கேத்தரின் கொலின்ஸ் என்னும் டயட்டிஷன் தெரிவித்துள்ளார். சிலர் வாழைப்பழத்தால் கதிரியக்க விஷம் பரவுவதாக கருதுகின்றனர்.

நமக்குள்ளும் கதிரியக்கம் இருக்கிறது எனக் கூறும் அவர், கதிரியக்க விஷம் பரவ ஒரு வேளைக்கு பத்து லட்சம் வாழைப்பழங்களை உண்ண வேண்டும் என்கிறார். ஒரு நாளில் 274 வாழைப்பழங்களை தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு உட்கொண்டுவந்தால், கதிரியக்கத்துக்கான அறிகுறிகள் தெரியவரும் என்கிறார் கேத்தரின்.

ஆகவே, எந்த பயமும் இன்றி ஒரு நாளில் எத்தனை வாழைப்பழங்களை உண்ண முடிகிறதோ, உண்ணுங்கள்!

Related Post