Breaking
Sun. Dec 22nd, 2024

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை உத்­தி­யோக பூர்­வ­மா­கவோ அல்­லது உத்­தி­யோ­கப்­பூர்­வ­மற்ற வகை­யிலோ எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சந்­தித்­தி­ருக்­க­வில்­லை­யென முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்­வரும் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நாமல் ராஜ­பக்­ ஷ­வுக்கும் இர­க­சிய சந்­திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்­றுள்­ள­தாக ஆங்­கில ஊட­க­மொன்று செய்தி வெளியிட்­டி­ருந்­தது.

குறித்த செய்­தியில், தனது குடும்ப உறுப்­பி­னர்கள் பல்­வேறு வகை­யான விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஒருவர் ஐந்­தாறு விசா­ர­ணை­களை எதிர்­கொண்­டு­விட்­ட­தா­கவும் நாமல் ரர­ஜ­பக்ஷ மைத்­தி­ரிக்கு கவலை தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை தம்­முடன் இணைந்து செயற்­படு­மாறு இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாம­லிடம் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிக்க உள்­ள­தாக தக­வல்கள் வெளிவரும் நிலையில் இந்த சந்­திப்பு முக்­கி­யத்­து­வ­மா­னது என்றும் சுதந்­திரக் கட்சி முக்­கி­யஸ்­தர்கள் இதனை ஏற்­பாடு செய்­துள்­ளனர் என்றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான தக­வல்கள் தொடர்­பாக கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், எனக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கு­மி­டையில் உத்­தி­யோ­க­மான முறை­யி­லேயோ அல்­லது உத்­தி­யோகப்­பற்றற்ற முறை­யி­லேயோ எந்­த­வி­த­மான சந்­திப்­புக்­களும் இடம்­பெ­ற­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவை கூட்டு எதி­ர­ணி­யினர் சந்தித்­தி­ருந்­த­போது நானும் அதில் பங்­கேற்­றி­ருந்தேன். அதுவே இறு­தி­யாக ஜனா­தி­ப­தியை சந்­தித்த சந்­தர்ப்­ப­மாகும். அதற்குப் பின்னர் அவ்­வா­றான எந்­த­வி­த­மான சந்­திப்­புக்­களும் இடம்­பெ­ற­வில்லை.

இச்­சந்­திப்பை அடிப்படையாகவைத்தே நான் ஜனாதிபதியைச் சந்தித்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான தகவல்கள் ஜனாதிபதிக்கும், பாராளுமன்ற உறுப்பினரான எனது கௌரவத்தையும் பாதிப்பதாக அமைவதோடு மக்களையும் தவறாக வழிநடத்துகின்றது என்றார்.

By

Related Post