Breaking
Sun. Dec 22nd, 2024

கடந்த கால யுத்த சூழ் நிலையின் போது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றி நியமனங்களை பெற்றிருப்பது அவர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

வடகிழக்கில் தொண்டராசிரியர்களாக பணியாற்றி வந்த சுமார் 1119 ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி உயரதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் அன்றைய யுத்த சூழ் நிலையில் உரிய பாடசாலைக்கு செல்ல முடியாத ஒரு இக்கட்டான  நிலை காணப்பட்டது .

இந்த நியமனங்களை பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை தொண்டராசிரியர்கள் நடாத்தி வந்தார்கள்.
இதற்காக கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற  மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதகமான தீர்வை பெற வேண்டுமென செயற்பட்டார்கள்.

இதற்காக இந்த தருணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்காக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நாட்டில் இடம் பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் ,இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு போன்றவற்றில் பிரதமருக்கு எவ்விதமான சவால்களுமின்றி முன்னெடுக்க அனைவரும் துணைபோக வேண்டுமெனவும் அனைத்து சவால்களையும் முறியடித்து வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்.
அனைத்து இன முஸ்லிம், சிங்களம், தமிழ், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் நன்மதிப்பை நம்பிக்கையைப் பெற்ற  சிறந்த தலைவனாக பிரதமர் செயற்பட்டு வருகிறார் என்றார்.

Related Post