Breaking
Wed. Nov 20th, 2024

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்த அவர், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபடாத காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அவர் சீருடை அணிந்திருப்பாராயின், முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை நிறுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

குறித்த காவல்துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்படும் போது சாரதி நிறுத்தாமல் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அத்துடன், சாரதியின் உறுதிப்பத்திரம், வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்வதற்கும் சீருடை அணிந்த காவல்துறையினருக்கு அனுமதி உள்ளது.

இதுதவிர, வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரம் உள்ளது.

அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி கைப்பற்றுவாராயின் 14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Related Post