Breaking
Tue. Dec 24th, 2024

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து நாட்டில் எதிர்க்­கட்­சிக்­கான பணியை சரி­யாக செய்யும். எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் போது எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சம்­பந்­தனை கைவி­ட­மாட்டோம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வுமான அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

அவ­சி­ய­மான எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டுவோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் நேற்று கட்சித் தலைமையகத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்

எதிர்க்­கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கு வழங்­கப்­பட்­டது இன்று ஒரு­சி­ல­ருக்கு மிகவும் வேதனை தரக்­கூ­டிய சம்­ப­வ­மாக மாறி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் ஒரு­சிலர் மிகவும் அதிர்ச்­சி­ய­டையும் வகையில் நேற்று செயற்­பட்­டனர்.
ஆனால் எம்மை பொறுத்­த­வ­ரையில் சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி பத­வியை வழங்­கி­யமையை மிகவும் நல்­ல­தொரு விட­ய­மா­கவே கரு­து­கின்றோம்.

அதேபோல் அவ­சி­ய­மான நேரத்தில் மிகவும் முக்­கி­ய­மான பொறுப்பு அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளதை நாம் நாட்டின் நல்­லாட்­சியின் ஒரு அம்­ச­மாக கரு­து­கின்றோம். அதையும் தாண்டி நாட்டில் மிகப்­பெ­ரிய சிக்­கலில் இருந்து நாம் தப்­பி­யுள்ளோம் என்­பதும் உண்­மை­யான விட­யமே.

அதா­வது பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களை பொறுத்­த­வ­ரையில் ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சி ஆகிய ஆறு கட்­சி­களே உள்­ளன.

இந்த கட்­சி­களில் இப்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசும் ஒன்­றி­ணைந்து கூட்டு அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. ஆகவே இந்த கட்­சிகள் மூன்றும் ஆளும் கட்­சி­யா­கவே கரு­தப்­பட வேண்டும்.

அவ்­வாறு இருக்­கையில் பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி யார் என்று பார்க்­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே எதிர்க்­கட்சி பத­விக்கு ஏற்ற தகு­தி­களை பெற்­றுள்­ளது. ஆசன எண்­ணி­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளையும், மக்கள் விடு­தலை முன்­னணி 6 ஆச­னங்­க­ளையும், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி 1 ஆச­னத்­தையும் பெற்­றுள்­ளது.

அந்த வகையில் எதிர்க்­கட்சி பதவி கூட்­ட­மைப்­புக்கு வழங்­கப்­பட்­டமை நியா­ய­மா­னதே.

மறு­புறம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஒரு­சிலர் தாம் எதிர்க்­கட்­சிக்­கான வாய்ப்பை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் ஆனால் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தனர். எனினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எதிர்க்­கட்சி பத­வியை எதிர்­பார்க்­க­வில்லை எனத் தெரிவித்து அக்­கட்­சியின் பொதுச் செய­லாளர் மூலம் சபா­நா­ய­க­ருக்கு கடிதம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே அந்த வகை­யிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தான் எதிர்க்­கட்சி பொறுப்பு வழங்­கப்­பட வேண்டும். மேலும் அனைத்து வகை­யிலும் இம்­முறை பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வாகும் வாய்ப்­புகள் இருந்தும் அவர்­க­ளுக்கு அந்த பொறுப்பை வழங்­கா­விட்­டி­ருந்தால் நாட்டில் மிகப்­பெ­ரிய குழப்பம் ஏற்­பட்­டி­ருக்கும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் முதன்மை கட்­சி­யாகும். அவர்­களை புறக்­க­ணிப்­பது நாட்டில் குறிப்­பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்­களை புறக்­க­ணித்­த­மைக்கு சம­மா­ன­தாகும்.

ஆகவே இம்­முறை அவர்­களை புறக்­க­ணித்­தி­ருந்தால் அது உள்­நாட்­டிலும்,சர்­வ­தேச மட்­டத்­திலும் மிகப்­பெ­ரிய எதிர்ப்­ப­லை­களை உரு­வாக்­கி­யி­ருக்கும். ஆகவே அதில் இருந்து எமது நாடு தப்­பி­யுள்­ளது.

மேலும் எதிர்க்­கட்சி என்­பது நாட்டில் மிகப்­பெ­ரிய பங்­கினை வகிக்கும் கட்­சி­யாகும். அர­சாங்­கத்தின் நல்ல செயற்­பா­டு­களை ஆத­ரிப்­ப­தைப்போல் தவ­று­களை சுட்­டிக்­காட்டும் மிக முக்­கிய பொறுப்பு எதிர்க்­கட்­சிக்கு உள்­ளது. ஆகவே அதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சரி­யாக செய்யும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. அதேபோல் நாமும் இப்­போது எதிர்க்­கட்­சியின் பக்­கமே உள்ளோம்.

சம்­பந்தன் எதிர்க்­கட்சி பத­வியை ஏற்­ற­வுடன் என்னை எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வாக பரிந்­து­ரைத்தார். ஆகவே அதை நான் ஏற்­றுக்­கொண்­டுள்ளேன். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஒன்­றி­ணைந்து நாட்டில் எதிர்­கட்­சிக்­கான வேலையை சரி­யாக செய்யும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­படும் நிலையில் ஜே.வி.பி உள்­ளதா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் எமக்கும் இடையில் எவ்­வி­த­மான தனிப்­பட்ட முரண்­பா­டுகள் இல்லை. நாம் பாரா­ளு­மன்­றத்தில் பல சந்­தர்ப்­பங்­களில் இணைந்து செயற்­பட்­டுள்ளோம்.

எனினும் அவர்­களின் கொள்­கைத்­திட்டம் எமது கொள்­கைத்­திட்­டத்தை விட மாறு­பட்­டது. அதை நாம் பேசி தீர்த்­துக்­கொள்ள முடியும். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர்கள் இந்த நாட்டில் தனிநாட்டை கோரவில்லை. ஆயுத கலாசாரத்தையும் ஆதரிக்கவில்லை. கடந்த தேர்தலின் போதும் அவர்கள் நல்லாட்சியின் பக்கம் நின்றே செயற்பட்டனர்.

ஆகவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடியும். அதுமட்டுமல்லாது எதிர்க்கட்சியாக செயற்படும் வேளையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தனை கைவிடமாட்டோம்.

அவசியமான எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.

Related Post