சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிரியாவில் ஐ.எஸ்.களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாஸ்கோவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “ ரஷ்யாவால் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை, சிரியாவில் ஐ.எஸ்.களுக்கு எதிராக நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கை நிரூபித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.