Breaking
Wed. Dec 25th, 2024
-அபூ அஸ்ஜத் –

தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான செய்திகளுக்கு ஹிரு தொலைக்காட்சியில் நேற்று இரவு இடம் பெற்ற பலய என்னும் சிங்கள மொழியிலான கலந்துரையாடல் பெரும் தெளிவினை ஏற்படுத்தியுள்ளாக ஆய்வாளர்களும், சில ஊடகவியலளார்களும் தமது கருத்துக்களை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதில் இருந்து காணமுடிகின்றது.

இற்றைக்கு ஒரு மாத காலமாக குறிப்பிட்டு பேசப்பட்டுவரும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதனோடு தொடர்பில்லாத வில்பத்து காடுகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் ஹிரு தொலைக்காட்சி மேற்கொண்ட பலய ஒளிபரப்பின் முடிவு இந்த தெளிவு ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையில் அண்மையக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பிற் போக்கு சக்திகளின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்ற வாய்ப்பேச்சுக்களால் எமது சமூம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் அதன் பின்னரான தற்போதைய மீள்குடியேற்றங்களுக்கு எதிராக இருப்பவர்களின் பின்னணி சில அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றம் அதன் பிற்பாடு அம்மக்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள்,2009 ஆம் ஆண்டின் பின்னரான சமாதான சூழலில் இந்த மக்களின் எதிர்காலம் என்பன பற்றி இந்த மக்களுக்காக குரல் கொடுக்க கூடியவர் தான் அமைச்சர் றிசாத் பதியுதீன். அவர் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை சிங்கள ஊடகங்களும்,இனவாத பௌத்த அமைப்புக்களும் முன்னெடுத்துவந்தன.

அதே வேளை இந்த சக்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்பட்ட போதும்,அது ஊடகங்களில் பிரதான செய்திகளாக வெளிவராது இருட்டடிப்பு செய்யப்பட்டது.இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது கொண்டிருந்த சமூக பற்றினை வெளிக் கொண்டுவரும் வகையில் இரவு பகல் பாராது சமூகப் பணியினை சரிவரச் செய்துவந்ததை நினைவுபடுத்துவது காலத்தின் பதிவாகும்.

இந்த நிலையில் பெரும் பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான செய்திகளை கொண்டு செல்வதும்,வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் ஒரு  நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுவருகின்றதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்த நிலையில் முஸ்லிம்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதையும், வில்பத்து தொடர்பில் ஏற்பட்டுள்ள பிழையான அனுகுமுறைகள் அதனோடு சார்ந்த இனவாத சிந்தனைகள் இவைகளுக்கு பதிலிருக்கும் வகையில் நேற்று இரவு இடம் பெற்ற பலய நிகழ்ச்சியானது களம் அமைத்து கொடுத்திருந்த்து.

இந்த நாட்டு சட்டம் தான் மன்னாரிலும் நடைமுறையில் உள்ளது என்பதை உறுதியாக கூறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வில்பத்த ஆக்கிரமிப்பு என்ற வாசகம் வெறும் இனவாத அணிகலன் என்றும் ஒரு அங்குலமேனும் அத்துமீறி எவரும் காணியினை அபகரிக்கவில்லையென்பதை ஆணித்தரமாக கூறியதை காணமுடிந்தது.

இந்த கலந்துரையாடலின் போது சுற்றாடல் ஆய்வாளர் என்பவரால் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் கடுமையாக இருந்தது அது சட்டத்துக்கு உட்பட்டதாக காட்டப்பட்ட போதும் உட்கருத்து முஸ்லிம்களை தாக்கும் ஒன்றாகவே இருந்த்து. அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டத்தை மீறியுள்ளதாகவும்,அதற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய போதும்,அச்சமற்ற நிலையில் சத்தியம் ஒரு போதும் தோல்வியுறாது என்ற நம்பிக்கையின் வெளிப்பாட்டில் சட்டத்தரணியின் நிலையில் இருந்து சட்டத்தையும் இங்கு விளக்கப்படுத்தியமை மற்றுமொரு ஆவணத் தன்மையின் உறுதியினை எடுத்தியம்பியது.

சமூகத்தின் விடிவு,விமோசனம் என்பவைகளுக்காக எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும்,தியாகமும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொண்டிருக்கின்றார் என்பதை இந்த பலய தொலைக்காட்சி நிகழ்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது.

Related Post