Breaking
Mon. Dec 23rd, 2024

– வி.நிரோஷினி –

பனாமா இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்றத்திலேயே கூடி பேசி தீர்மானிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில்  இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகில் இரசிய வங்கிக்கணக்குகள் உள்ள நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post