Breaking
Mon. Dec 23rd, 2024

–    அஸ்ஜத் –

எதிர்வரும் 17 ஆம் திகதி இடம் பெறும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் முதன்மைய வேட்பாளராக இலக்கம் 1 இல் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு இன்று அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குகளை அளித்தமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தபால் வாக்குகளை பாவித்த வன்னி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தனது நன்றியினை தெரிவித்த அவர் நீங்கள் உங்களது மனசாட்சிக்கு அமைய எவ்வித தனிப்பட்ட லாபங்களையும் கவனத்திற் கொள்ளாது சமூகத்தினதும்,பிரதேசத்தினதும்,மாவட்டத்தினதும் அபிவிருத்தியினை முன்னிறுத்தி தனக்கும்,ஏனைய வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்தீர்கள் என எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக வடக்கில் காணப்பட்ட அச்ச சூழல் மாற்றப்பட்டு இன்று அரச அதிகாரிகள் அச்சமின்றி சுதந்திரமாக தமது பணிகளை செய்கின்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.அரச அதிகாரிகள் பொதுமக்களுக்கு பணியாற்றும் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்று தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்,அதே போல் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எமது மயில் சின்னத்தில் போட்டியிடும் அம்பறை மாவட்டத்திலும் வாக்களித்த அரச அதிகாரிகள்,அதே போல் அநுராதபுரம்,புத்தளம்,குருநாகல்,மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச் சின்னத்திலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில் அவர்களுக்கும் நீங்கள் வாக்குகளை அளித்துள்ளமைக்கு கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் தமது நன்றியினை தெரிவிப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

அதே போல் நாளை (2015-08-04) ஆம் திகதியும் அரச அதிகாரிகள் தங்களது வாக்குகளை அளிக்கவுள்ளதால் உங்களது பெறுமதியான வாக்கினை நாட்டின் நல்லாட்சி,சமூக சிந்தனையினை கொண்வர்களுக்கு அளிப்பதன் தேவைப்பாட்டினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அரச அதிகாரிகளிடத்தின் பார்வைக்கு கொண்டுவந்துள்ளார்.

Related Post