இக்பால் அலி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தான் ஆதரிப்பதாக கண்டி மாவட்ட, சமூக அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.சியாம்டீன் தெரிவித்தார்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.