அமைச்சரவை அங்கீகாரத்தின் அதிகரிப்பு ஓய்வூதிய பணமான ரூபாய் 98,500 ற்கு முதல் தான் மாதாந்த ஓய்வூதிய தொகையாக 25,000 ரூபாயையே பெற்று வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சம்பளப் பணமாக ரூபாய் 25.000த்தை தான் முதன்முதலில் 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டதாகவும், அத்தொகையில் எவ்வித அதிகரிப்பும் 2005 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர்களின் சம்பள பண அதிகரிப்பானது 1994ம் ஆண்டு ரூபாய் 14,000ல் இருந்து 35.000 ஆக அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் மீண்டும் அமைச்சர்களின் சம்பளப் பணம் ரூபாய்.60.000 ஆக அதிகரிக்கப்படட் போதிலும் ஜனாதிபதியின் சம்பளம் ரூபாய் 25,000 ஆகவே காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தனது ஓய்வுதிய பணத்தை அதிகரிக்க கோரி பல கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் மூன்று காரணங்களை முன் வைத்து நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய ஜனாதிபதியினால் அக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.