Breaking
Mon. Dec 23rd, 2024

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, தன்னுடைய பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்தது. ஆனால் அவரால், இதில் பங்கேற்க முடியாமல் போனது, எனவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இம்மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றான, ‘புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள்’ என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்காக நடாத்தப்பட்ட மாநாட்டில் நான் பங்கேற்றேன்.
அதன் மூலம் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனத்தை செல்லுத்த முடிந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தனது இந்த விஜயத்தை, கடந்த கால ஆட்சியுடன் ஒப்பிடவேண்டாம் என்றும் அதுவும் தன்னுடைய குடும்பமும் முற்றிலும் நேரெதிரானது. என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். D C

Related Post