Breaking
Fri. Jan 10th, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷத ராஜபக்சவே எனது மகனைத் தாக்கியுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

மாலக்க சில்வா யோஷிதவின் பாதுகாப்பாளர் ஒருவரை எச்சரித்திருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே எனது மகன் தாக்கப்பட்டார். எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு குறித்த தாக்குதல் தொடர்பில் தாமதமாகவே தெரியவந்ததாக என்னிடம் தெரிவித்திருந்தார்.

எனினும் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனது மகன் மாலக்கவைப் பார்ப்பதற்கு வருகை தந்திருந்தார்.

மேலும் சம்பவம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று விடயத்தை அறிந்து கொள்ளும் நோக்குடன் கண்காணிப்புக் கமராவில் பதிந்தவற்றை பார்த்த போது பதிவாகிய காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post