Breaking
Fri. Nov 22nd, 2024
தனது புதல்வரான விமுக்தி குமாரதுங்க எந்த காலத்திலும் இலங்கையில் அரசியலில் ஈடுபட மாட்டார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி, கட்சியின் தலைமையகத்தில் நேற்று (08) இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் யாரிடமும் பதவிகளை கேட்க மாட்டேன். எனது மகன் இங்கு அரசியலில் ஈடுபட வரமாட்டார்.

குடும்ப ஆட்சி நாட்டில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என நான் கூறமாட்டேன்.

எனது மகன் இலங்கைக்கு வந்து சேவையாற்றுவார், ஆனால் அரசியலில் ஈடுபட மாட்டார்.

நாட்டுக்காக கடும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, நாடு அழிந்து போவதை கண்டு கண்களை மூடிக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உதவுவதற்கு வந்தேன்.

இறுதியில் அனைத்து சுமைகளையும் நானே சுமக்கும் நிலையேற்பட்டது எனவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post