ஏ.எச்.எம். பூமுதீன்
முஸ்லிம் தேசியத் தலைமை ஒன்று வடக்கிலிருந்து பரினமிப்பதற்கு பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று முதல் செய்து வரும் சதியை – அவர்களின் வலையில் சிக்கிக் கொண்ட ஒரு குழு இன்று பிரதேசவாதம் என்ற போர்வையில் அச்சதியை அரங்கேற்ற முனைவதாக கடும் தொனியில் எச்சரித்துள்ளார் அ.இ.ம.கா முசலி பிதேச சபையின் பிரதி தவிசாளர் பைறுஸ்
சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் இறைவன் என்பதை அச்சதிகாரர்களுக்கு ஞாபகம் ஊட்டும் அதே நேரம் இச்சதியை முறியடித்து – வடக்கு முஸ்லிம்களை பாதுகாக்க , அவர்களின் இருப்பை உறுத்திப்படுத்த, அனைவரும் ஒன்றுபடுவோம் என்றும் பைறுஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வேப்பங்குளத்தில் தையல் பயிற்சி நிலையங்களை திறந்து திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்ட தகவல்களை பிரதி தவிசாளர் வெளியிட்டார்.
பைறுஸ் மேலும் உரையாற்றுகையில், வடக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்ற ரீதியில் முசலியை எனது இதயமாகவே பார்க்கின்றேன்.
புத்தளம் – மன்னார் வீதியை திறக்க இனவாதிகள் சதி செய்த போது, அதனை முறியடித்து அந்த வீதியை திறந்து வைத்தவர் அமைச்சர் . இந்திய வீடமைப்புத் திட்டம் வந்த போது அந்த திட்டத்தை மன்னாரில் எங்கு கொண்டு செல்வது என்று இந்திய தூதரகம் யோசித்துக்கொண்டிருந்த போது முசலிக்குத் தான் அதனை வழங்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று அதனையும் செய்து காட்டியவர் அமைச்சரே. மீனவர் துறைமுகம் அமைக்க அராசாங்கம் திட்டமிட்ட போது சிலாபத்துறைக்கு அந்த துறைமுகத்தை பெற்றெடுப்பதற்கு சிபாரிசு செய்து கொடுத்தவரும் அவர்தான். அரசியல் ரீதியாகவும் பலமொன்றை இந்த மண்ணுக்கு பெற்றுக் கொடுத்தவரும் எமது அமைச்சர் தான்.
இப்படியாக எத்தனையோ அபிவிருத்திகளை இன்று கண்டுள்ளது முசலி பிரதேசம். இங்குள்ள ஒவ்வொரு கல்லும் அதற்கு சாட்சியாக உள்ளன.
ஆனால் இதனை மறைக்க ,இந்த மண்ணிலிருந்து அமைச்சரை தூரப்படுத்த இப்போது ஒரு சிறு குழுவால் சதி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று முளைத்த காளான்களான அந்தக் குழு அமைச்சரையும் முசலியையும் பிரிக்க எடுக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.
பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று செய்த சதியை – அவர்களின் வழியை பின்பற்றும் அந்தச் சதிக் கும்பல் வழங்கும் அற்பசொற்ப சலுகைகளை பெற்றுக்கொண்டு இந்தச் சிறு குழு இந்த மண்ணலிருக்கும் முஸ்லிம் தேசியத் தலைமையை அழிக்க சதிகளை உருவாக்கி வருகின்றது.
இந்தச் சதியை முளையிலேயே கிள்ளி எறிவதற்குள்ள ஒரே ஒரு வழி எமது ஒற்றுமை தான். நாம் பிரிந்து நிற்பதால் பலவீனம் அ;டைவது நமது சமுகமும் பிரதேசமும் தான் என்ற எதார்த்தத்தை நாம் உணர வேண்டும். வீடுகளை கொடுத்தால் அமைச்சரின் கொடும்பாவிகளை எரிக்கின்றனர். அவர் மக்களுக்கு செய்யும் உதவிகளை தடுக்க இனவாதம் பூசுகின்றனர்.
வடக்கு முஸ்லிம் சமுகம் இந்த விடயத்தில் இன்னும் பாராமுகமாக இருக்கின்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். அந்தச் சதிக்கும்பல்களுடன் இணைந்திருக்கும் எமது சமுகத் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட இனியும் வன்னி முஸ்லிம் சமுகம் பின்னிற்க கூடாது.
அமைச்சரின் அரசியல் காலத்தை நன்கு பயன்படுத்தி உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள தயாராகுங்கள்.
அமைசசர் அரசியல் ரீதியில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சமுகத்திற்கும் பிரதேசத்திற்கும் நலன் மிக்க முடிவாகவே அமையும். இதற்கு ஒத்துழைப்பை வழங்கினால் நிச்சயம் நாம் அனைவரும் வெற்றி பெறலாம்.