Breaking
Mon. Dec 23rd, 2024
லசித் மலிங்க காயம் காரணமாக தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதை தொடர்ந்து தன்னிடம் இருபதுக்கு 20 உலககிண்ணத்தொடரில் கலந்துகொள்ளும் அணியின் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டவேளை  தான்  அதற்கு மனதளவில் தயாராகயிருக்கவில்லை என மத்தியுஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அணியின் தலைமைப்பொறுப்பு என்னிடம் ஓப்படைக்கப்பட்டவேளை அதனை ஏற்பதற்கு நான் மனதளவில் தயாராகயிருக்கவில்லை, எனினும், கடந்த சில வருடங்களாக அணிக்கு தலைமைதாங்கிய அனுபவம் எனக்குள்ளது, ஆகவே, இது தற்போது எனக்கு சவாலாக அமையப்போகின்றது.
தெரிவுக்குழுவினர் மலிங்கவுடன் இணைந்து கடந்த பல மாதங்களாக இந்த போட்டிகளிற்கான திட்டமிடலை மேற்கொண்டு வந்தனர். ஆனால், தற்போது இதுவொரு புதிய சூழ்நிலை, இதனால் நான் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள அணியிடமிருந்து சிறப்பான பெறுபேறுகளை பெறவேண்டும்.
உலககிண்ண தொடரிற்கான தலைமைத்துவத்தை மாத்திரம் நான் ஏற்றுக்கொண்டுள்ளேன், இதன் பின்னர் அவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது, உலககிண்ண போட்டிகளிற்கு தலைமை தாங்குமாறு கேட்கும்போது எப்படி நிராகரிக்க முடியும், என்னால் நாட்டையும் அணியையும் கைவிட முடியாது அதனால் இதனை சாதகமாக எடுத்துக்கொள்கிறேன் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

By

Related Post