Breaking
Mon. Dec 23rd, 2024

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வெலி ஓயா (மணல் ஆறு) கிராமத்திற்கு நேற்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் பரப்புரை நிமித்தம் விஜயம் செய்திருந்தார்.

வெலி ஓயா ஜனக புர,சம்பத் நுவர,கல்யாணி புர,மாயாவ,எகட்டுவெவ,எதாவெடுனுவெவ, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடலை நடத்தினார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் கடந்த காலங்களில் மக்களுக்கு ஆற்றிய பணிகளை வரவேற்ற இப்பிரதேச சிங்கள மக்கள் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான வேட்பாளர்கள ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிகழிவகளில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது –

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராகவும்,வெலி ஓய பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராகவும் இருந்து இப்பிரதேசத்துக்கும்,மக்களுக்கும் தேவையான பணிகளை ஆற்றியுள்ளேன்.
என்னிடம் இனவாத இல்லை.மதவாதம் இல்லை.நீங்கள் அளித்த வாக்குகளை வைத்து மக்களின் நலனுக்கான திட்டங்களையே செய்துவந்துள்ளேன்.ஆனால் இன்று ஒரு தேர்தல் வந்துள்ளது,இந்த தேர்தலில் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே வருவார்,எனவே நீங்கள் தோற்கப் போகும் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களித்து எதனை சாதிக்க முடியும் என்று கேட்கவிரும்புகின்றேன்.

இந்த பிரதேச மக்களின் வாழ்வாதார நிலையினை பார்க்கின்ற போது கவலைத்தருகின்றது.இந்த நிலையினை மாற்றி சிறந்த வாழ்வாதாரத்தை நோக்கிய பயணத்தினை உங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.வீடற்ற எத்தனையோ குடும்பங்கள் இங்கிருப்பதாக அறிய முடிகின்றது.அவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதே எனது முதலாவது பணியாகும்.

இந்த மாவட்டத்தை பொறுத்த வரையில் யுத்தம் அழிவினை ஏற்படுத்திய மாவட்டமாகும்,இங்கு அபிவிருத்திகளை ஆரம்பத்தில் இருந்து செய்ய வேண்டியுள்ளது.அதனை செய்வதற்கு இப்பிரதேச மக்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாது ஏனையவர்களையும் வாக்களிக்கச் செய்யும் பணியினை நீங்கள் செய்ய வேண்டும்..

இன்று வெற்றிலை சின்னத்தில் வருபவர்கள் இனவாதத்தை பேசுகின்றனர்.எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்கின்றனர்.இதன் மூலம் அவர்கள் எதிர் பார்ப்பது இந்த மாவட்டத்தில் மக்களுக்கு பணியாற்றும் அரசியல்வாதிகள் இருக்க கூடாது என்று,ஆனால் நாம் இவர்களது இந்த செயற்பாடுகளுக்கு நாம் முகம் கொடுத்து மக்களுக்கு யதார்த்தத்தை புரியவைத்து வருகின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக கொண்டுவருவதற்கு எமது கட்சியும்,இந்த நாட்டு முஸ்லிம்களும்,தமிழர்களும் அளப்பறிய பங்களிப்பினை செய்துள்ளனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாத சிந்தணையினை மக்கள் மத்தியில் எடுத்து சென்று வாக்குகளை சேகரிக்கும் வேலையினைமுன்னெடுக்கின்றது.ஆனால் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனவாதமற்ற முறையில் தமிழர்களும்,சிங்களவர்களும்,முஸ்லிம்களும் ஓரே அணியில் இருக்கக் கூடிய ஜனநாயக உரிமையினை வழங்கியுள்ளது என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related Post