ஜனாதிபதி வேட்பாளராகக் குடியரசுக் கட்சி தன்னை நியமிக்காவிட்டால், கலவரங்கள் ஏற்படலாம் என்று தாம் நினைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் முன்னணியிலிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வார்த்தை பிரயோகங்களால் குடியரசுக் கட்சி, அதன் பேரவையில் ஜனாதிபதி வேட்பாளராக மற்றொருவரை முன்மொழிய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தல் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.