Breaking
Fri. Nov 15th, 2024

அபுஷெய்க் முஹம்மது

1.ஒரு வருடத்திற்கு முன்பு ரோஹிங்க்யா முஸ்லிம்களை கடத்திய கொடுமைக்காரர்களை விட்டும் அவர்களின் முகாம்களை விட்டும் தப்பி சென்று இருக்கின்றார் தோஹா .

2.தோஹா மற்றும் அவருடைய நண்பர்கள் முகாம்களை கண்காணிக்கும் நபர்களால் கொடூரமான முறையால் இரும்புத்தடி மற்றும் கட்டையால் பெற்ற தாக்குதல் பொறுக்க முடியாமல் தப்பிச்சென்று உள்ளனர் .

3.அடர்ந்த காட்டுப்பகுதியான மலேசியா -தாய்லாந்த் நாட்டின் எல்லையோரப் பகுதிகளான வாங் கெலிஅன் என்ற இடத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த கொடுமைகள் அரங்கேறி உள்ளன .

4.மேலும் அவர்கள் சொன்ன தகவல்கள் ,எங்கள் நாட்டில் பர்மிய அரசாங்கம் மற்றும் புத்த தீவிரவாதிகளால் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வெளியேறி இவர்களிடம் சிக்கிக்கொண்டோம் .

5.கடத்தல்காரர்கள் அரங்கேற்றிய பசிக்கொடுமைகள், தவறான முறை கேடுகள், தாக்குதல்கள் மற்றும் பல இறப்புக்களை சொல்வதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கின்றோம்

6.யூனுஸ்,வயது 23. அவனை இஸ்லாமிய முறைப்படி குளிப்பாட்டி மண்ணில் புதைத்தது நேற்று நடந்த நிகழ்வை போலவே இருக்கின்றது

7.நானும் யூனுஸும் ஒரே கூண்டில் தங்க வைக்கப்பட்டனர் ,நாங்கள் இருவரும் இந்த முகாம்களில் நாம் ஒருவரையொருவர் எப்பொழுதும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டோம்

8.ஒரு நாள் முகாம் கண்காணிப்பாளன் யூனுஸை வெளியே தள்ளினான் .அவனை விடுவிக்க வேண்டும் என்றால் 8000 மலேசியன் பணம் வேண்டினான்.

9.அவர்களிடம் யூனுஸ் என் நாட்டை விட்டு வெளியேறி வர, மலேசியா வருவதற்கு என் வீட்டை அடமானம் வைத்து மியான் மார் நாட்டில் உங்கள் முகவரிடம் 5500 மலேசியன் பணம் கொடுத்து விட்டேன் . என்னிடம் பணம் இல்லை என்று கெஞ்சினான் .

10.முகாம் கவனிப்பாளர்கள் ஐந்து நபர்கள் சேர்ந்து யூனுஸை இரும்புத்தடியாலும் கட்டையாலும் தாக்கினார்கள் .பிறகு அவன் கூண்டிற்குள் கொண்டு வரப்பட்டான் .

11.தாக்குதலின் காரணமாக, யூனுஸ் அசைய முடியவில்லை மற்றும் சாப்பிட முடியவில்லை. பலத்த காயத்தினால் நான்கு நாட்களுக்கு பிறகு இறந்த போனான் .

12.முகாம் காவலாளிகள் இஸ்லாமிய முறைப்படி குளிப்பாட்டி புதைக்க என்னை அழைத்தனர். நான் காயத்தில் இறந்த என் நண்பர்களின் காயங்களை அவர்களை குளிப்பாட்டும் போது அறிந்து கொள்ள முடிந்தது .

13.நோய் மற்றும் தாக்குதலில் இறக்கும் போது அவர்கள் சிறிய காலாடைகளை மட்டுமே அணிந்து இருந்தனர் என தோஹா
நடந்த ரணங்களை பெர்னாமா ஊடகத்திற்கு கவலை தாங்காமல் செய்திகள் அளித்தார்

14.ஜிஹாத் அல் இஸ்லாம் கூறும் போது , தாய்லாந்த் நாட்டில் படங் பசர் என்ற இடத்தில 7 பேரை புதைக்க நான் ஏவப்பட்டேன் .

15.முகவர்கள் இடத்தில்இருந்து இறந்த நபர்களை சாகும்வரை அடிக்க கட்டளைவந்தது.அந்தமுகவர்கள்ரோஹிங்க்யாவைச்சேர்ந்தவர்கள் சிக்கு அன்வர் ,உஸ்தாத் அன்வர், முஹதுல்லாஹ் ஆவர் .

16.அவர்கள் இந்த 7 நபர்களையும் மலேசியாவிற்கு அழைத்துச்செல்ல
வாக்குறுதி தந்து உள்ளனர் .

17.ஜிஹாத் அல் இஸ்லாம் இவர்களின் தடுப்புக்காவலில் இரண்டு மாதங்கள் இருந்து விட்டு இந்த துயரமான சம்பவங்களுக்கு பிறகு
அவரின் நண்பர்களுடன் தப்பிச்சென்று உள்ளார் ..

Related Post