Breaking
Tue. Dec 3rd, 2024
என் மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என முன்னாள் பொலிஸ்மா அதிபரான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
தான் நீண்டகாலமாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியுள்ளதாகவும், என்னுடையநற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பலர் பொய் குற்றச்சாட்டுக்களைசுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரக்பி வீரர் தாஜுடீன் கொலை வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளிவருவதாகவும், முடிந்தால் அதை நிரூபிக்குமாறும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த வழக்கில் எவ்வித சவால்களுக்கும் தான் முகங்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தாஜுடீன் கொலை வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர்குறிப்பி்ட்டுள்ளார்.

By

Related Post